சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x

மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைெபற்றது.

விருதுநகர்

ராஜபாளையம்

மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைெபற்றது.

ராஜபாளையம்

ராஜபாளையம் சொக்கர் என்ற மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மாயூரநாத சுவாமி கோவில், கருப்ப ஞானியார் கோவில், அருணாச்சலேஸ்வரர் கோவில், குருசாமி கோவில், பறவை அன்னம் காத்தருளிய சாமி கோவில், மதுரை சாலையில் உள்ள தாரண்யா நந்தீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக நந்திக்கு மஞ்சள், தேன், இளநீர், பால், தயிர் உள்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. அதேபோல ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் தவநந்தி கண்டீஸ்வரர் கோவில், தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில், வாழவந்தாள்புரம் கிராமத்தில் மன்மத ராஜலிங்கேஸ்வரர் கோவில், தெற்கு வெங்கநல்லூர் சிதம்பரேஸ்வரர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

சாமி தரிசனம்

அதேபோல சோழபுரம் விக்கிரம பாண்டீஸ்வரர் கோவில், அயன் கொல்லங்கொண்டான் வீரபாண்டீஸ்வரர் கோவில், இளந்திரை கொண்டான் காளாஹஸ்தீஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு சிவன் கோவில்களில் பிரதோஷம் வழிபாடு நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

வெம்பக்கோட்டை

வெம்பக்கோட்டை அருகே சத்திரம் கிராமத்தில் உள்ள காசி விசுவநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

அதேபோல பழைய ஏழாயிரம்பண்ணையில் ஈஸ்வரன் கோவில் மற்றும் வெம்பக்கோட்டை சுந்தரேசுவரர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.


Next Story