சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் கைலாசநாதர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி கைலாசநாதருக்கு பால், தயிர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கைலாசநாதருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றனன. இதேபோல் குறிஞ்சான் குளக்கரையில் அமைந்துள்ள காசி விசுவநாதர், ரெயில் நிலையம் அருகே அமைந்துள்ள காசி விசுவநாதர், செட்டி ஏரிக்கரையில் அமைந்துள்ள சிவபெருமான் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விசுவநாதர் கோவிலில் மகா பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி விசுவநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் நந்தி பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து பிரதோஷ நாயகர்கள் அலங்கரிக்கப்பட்டு திருமுறைகள், சிவபுராணம் முழங்க கோவிலில் பிரகார பிரதட்சணம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பிரதோஷ வழிபாட்டு குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதுபோல் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி சவுந்திரநாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில், கோடாலிகருப்பூர் மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாதர் கோவில், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்கசகாயேஸ்வரர் கோவில், மதனத்தூர் ராமலிங்கேஸ்வரர் கோவில், அருள்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் பிரதோஷத்தையொட்டி சுவாமி, அம்பாள், நந்திபெருமானுக்கு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story