மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் பிரதோஷவிழா


மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் பிரதோஷவிழா
x

விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் பிரதோஷவிழாவை முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஆடி மாத பிரதோஷ விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு பிரதோஷ நந்தி வாகனத்தில் சந்திரசேகரராக சுவாமியும், அம்பாளும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

இதனைத்தொடர்ந்து நந்தி பெருமானுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், திருநீறு, மஞ்சள் உள்ளிட்ட பலவகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் அருகம்புல், எருக்கம் பூ, மஞ்சள், வில்வ இலை உள்ளிட்ட மாலைகள் சாற்றி சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்பாளுக்கு தீபாராதனையுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story