நகைகளை போலீசில் ஒப்படைத்த டிரைவருக்கு பாராட்டு


நகைகளை போலீசில் ஒப்படைத்த டிரைவருக்கு பாராட்டு
x

ஆட்ேடாவில் தவற விட்ட நகைகளை போலீசில் ஒப்படைத்த டிரைவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

விருதுநகர்

விருதுநகர்,

விருதுநகரை சேர்ந்த கருப்பசாமி என்பவர் தனது மகள் திருமணத்தை இந்நகர் ராமர் கோவிலில் நடத்திவிட்டு வரவேற்பு நிகழ்ச்சிக்காக ராமமூர்த்தி ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு ஆட்டோவில் சென்றார். அப்போது கருப்பசாமி 22 பவுன் நகைகளை ஆட்டோவில் தவற விட்டுவிட்டார். அந்த ஆட்டோ டிரைவரான ஆர்.எஸ். நகரை சேர்ந்த ராமர் என்பவர் தனது ஆட்டோவில் கருப்பசாமி தவறவிட்ட 22 பவுன் நகைகளை விருதுநகர் கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணை நடத்தி அந்த நகைகளை கருப்பசாமியிடம் ஒப்படைத்தனர். ஆட்டோ டிரைவர் ராமரின் நேர்மையை பாராட்டி போலீஸ் சூப்பிரண்டு மனோகர் அவருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.



Next Story