போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு
சிறுமியின் படிப்புக்கு உதவிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு சூப்பிரண்டு பாலாஜிசரவணன் பாராட்டு தெரிவித்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி செய்துங்கநல்லூர் கருங்குளத்தை சேர்ந்த ஒரு சிறுமி தாய்- தந்தை ஆதரவின்றி பாட்டியின் பாராமரிப்பில் வளர்ந்து வருகிறார். அவர் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் போதிய பண வசதி இல்லாததால், அவரது பாட்டி படிப்பை நிறுத்தி உள்ளார். இதனை அறிந்த செய்துங்கநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், அந்த சிறுமியை தனது சொந்த செலவில் அதே பள்ளிக்கூடத்தில் படிப்பதற்கான பண உதவி செய்து உள்ளார். படிப்புக்கு தேவையான புத்தகங்களையும் வாங்கி கொடுத்து உதவி உள்ளார்.
இதைத் தொடர்ந்து சிறுமியின் படிப்புக்கு உதவிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், நேற்று மாவட்ட போலீஸ் அலுவலகத்துக்கு அழைத்து பாராட்டினார்.
Related Tags :
Next Story