79-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆனார் தமிழகத்தை சேர்ந்த பிரனேஷ்...!


79-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆனார் தமிழகத்தை சேர்ந்த பிரனேஷ்...!
x

இந்தியாவின் 79-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார் சிறுவன் பிரனேஷ்.

சென்னை,

இந்தியாவின் 79-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார். காரைக்குடியை சேர்ந்த 15 வயது சிறுவன் பிரனேஷ்.

தமிழகத்தின் 28-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார் பிரனேஷ். காமன்வெல்த் போட்டியில் வெள்ளி, ஆசிய செஸ் போட்டியில் தங்கம், 16 வயதுக்குட்பட்ட சர்வதேச செஸ் தொடரில் வெண்கலம் வென்றுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவர் பிரனேஷ். இவர் காரைக்குடி வித்யாகிரி பள்ளியில் படித்து வருகிறார். தந்தை முனிரத்தினம் ஜவுளிக்கடை ஒன்றில் கணக்கராகவும், அம்மா மஞ்சுளா அங்கன்வாடி பணியாளராகவும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story