'அரிக்கொம்பன்' யானை குணமடைய வேண்டி சிறப்பு யாக வேள்வி பூஜை
அரிக்கொம்பன் யானை குணமடைய வேண்டி சிறப்பு யாக வேள்வி பூஜை நடந்தது.
தேனி
தேனி மாவட்டத்தில் அட்டகாசம் செய்த 'அரிக்கொம்பன்' யானையை நேற்று முன்தினம் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். அந்த யானைக்கு உடம்பெல்லாம் புண்கள் இருந்தன. இந்நிலையில் 'அரிக்கொம்பன்' யானை பூரண குணமடைந்து விரைவில் அதன் பிறப்பிடத்திற்கே செல்ல வேண்டி, சிவசேனா கட்சி சார்பில், வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார் கோவில் முன்பு சிறப்பு யாக வேள்வி பூஜை நேற்று நடந்தது. இந்த வேள்வி பூஜையை கேரள நம்புதரி அபுஜித் நடத்தினார். இதில் சிவசேனா கட்சியின் மாவட்ட அமைப்பாளர் முருகவேல், மாநில செயலாளர் குரு அய்யப்பன், மாவட்ட தலைவர் கருப்பையா, இளைஞரணி தலைவர் கார்த்திக், மகளிர் அணி தலைவி கோகிலா மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story