தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை


தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
x
தினத்தந்தி 2 Jan 2023 12:15 AM IST (Updated: 2 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

புத்தாண்டையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி

புத்தாண்டையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு பிரார்த்தனைகள்

ஆங்கில புத்தாண்டையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடந்தது. கிருஷ்ணகிரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை தேவாலயத்தில் 2023-ம் ஆண்டு பிறப்பையொட்டி நள்ளிரவு சிறப்பு திருப்பலி மற்றும் 2022-ம் ஆண்டில் இறைவன் செய்த நன்மைகளுக்கு நன்றி தெரிவிக்கும் சிறப்பு ஆராதனை வழிபாடுகள் நடந்தன.

அதனைத் தொடர்ந்து 2023-ம் ஆண்டை வரவேற்கும் விதமாக ஆலய பங்குதந்தை இசையாஸ் சிறப்பு திருப்பலி, ஜெபவழிபாடுகளை நடத்தினார். பின்னர் அனைத்து தரப்பு மக்களும் எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்று வாழவும், சிறப்பு ஜெப வழிபாடு, பிரார்த்தனைகள் நடந்தன.

வாழ்த்து

இந்த புத்தாண்டையொட்டி சிறியவர் முதல் பெரியவர் வரை புத்தாடை அணிந்து, ஆலயத்திற்கு வந்திருந்தனர். திருப்பலி மற்றும் பிரார்த்தனை முடிந்ததும், ஒருவருக்கு ஒருவர் தங்களுடைய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். புத்தாண்டு வழிபாட்டிற்காக தேவாலயம் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதேபோல் ஐ.இ.எல்.சி, பெந்ததோஸ்தே, சி.எஸ்.ஐ. தேவாலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி, ஆராதனை போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

இதேபோல் எலத்தகிரி, சுண்டம்பட்டி, புஷ்பகிரி, கந்திகுப்பம், பர்கூர், காவேரிப்பட்டணம், ஓசூர், சூளகிரி, ராயக்கோட்டை என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story