ராஜகோபுர திருப்பணி தொடங்க வேண்டுதல் விழா


ராஜகோபுர திருப்பணி தொடங்க வேண்டுதல் விழா
x

திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோவிலில் ராஜகோபுர திருப்பணி தொடங்க வேண்டுதல் விழா நாளை நடக்கிறது

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

வீரவநல்லூர் அருகே திருப்புடைமருதூரில் நாறும்பூநாதர்-கோமதி அம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராஜகோபுர திருப்பணி தொடங்குவதற்காக வேண்டுதல் விழா நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. கஜானன் மகராஜ் கைங்கர்ய சபா சார்பில் நடக்கும் இந்த விழா சிறப்பு அபிஷேகங்கள், ஆதராதனைகளுடன் மாலை 4.30 மணிக்கு தொடங்கி 6 மணி வரை நடக்கிறது.

மாலை 4.30 மணிக்கு 3 ஆயிரத்து 24 செவ்இளநீரை கொண்டு சுவாமி, அம்பாள் மற்றும் நந்திக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. அனைத்து சன்னதிகளிலும் மலர்களை கொண்டு சர்வ அலங்காரம், சுவாமி-அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் 10 ஆயிரத்து 8 தீப ஒளியின் மத்தியில் 3 முறை பவனி வருதல் நடக்கிறது.

இந்த விழாவையொட்டி வீரவநல்லூர், முக்கூடலில் இருந்து கோவிலுக்கு அன்று மாலை 4 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை இலவச பஸ் வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.



Next Story