வருமுன் காப்போம் மருத்துவ முகாம்


வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
x

வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி மாநகராட்சி நிர்வாகம் மற்றும் சிவகாசி சுகாதார மாவட்டம் சார்பில் திருத்தங்கல் கலைமகள் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று காலை நடைபெற்றது. முகாமை மேயர் சங்கீதா இன்பம் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் கலுசுலிங்கம், டாக்டர் வைரக்குமார், அதிகாரிகள் சீனிவாசன், முதல் மண்டல தலைவர் குருசாமி, கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சித்திக், கந்தசாமி, செல்வம், ஆசிர்வாதம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் பொதுமருத்துவம், சித்த மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், இதய மருத்துவம், ஆய்வக பரிசோதனை, இ.சி.ஜி., கர்ப்பவாய்புற்றுநோய் பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை ஆகியவை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.


Next Story