தட்டார்மடம் அருகே தேர்தல் முன்விரோதம்:கூட்டுறவு தலைவர் மீது தாக்குதல்
தட்டார்மடம் அருகே தேர்தல் முன்விரோதத்தில் கூட்டுறவு தலைவர் மீது தாக்குதல் நடத்திய அக்காள்-தங்கை கைது செய்யப்பட்டனர்.
தட்டார்மடம்:
தட்டார்மடம் அருகே தேர்தல் முன்விரோதத்தில் கூட்டுறவு சங்க தலைவரை தாக்கிய அக்காள், தம்பியை போலீசார் கைதுெசய்தனர்.
தேர்தல் முன்விரோதம்
தட்டார் மடம் அருகே உள்ள பொத்தகாலன்விளையைச் சேர்ந்தவர் லூர்துமணி (வயது 47). இவர் சாஸ்தாவிநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராக உள்ளார். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த மகிழ்பன் மனைவி நிர்மலாதேவி (60) என்பவருக்கும் உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்டு தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது.
தாக்குதல்
இந்நிலையில் நேற்று முன்தினம் லூர்துமணி, பொத்தகாலன்விளையில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த நிர்மலாதேவி, அவரை அவதூறாக பேசியுள்ளார். இதை தட்டிக்கேட்டதில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது நிர்மலாதேவிக்கு ஆதரவாக அவரது சகோதரர் சந்தானம் மகன் மிக்கேல் (50) என்பவரும் சேர்ந்து கொண்டு லூர்துமணியிடம் தகராறு ெசய்துள்ளார். தகராறு முற்றியதில் லூர்துமணியை மிக்கேல் கிழே தள்ளி தாக்கியுள்ளார். அப்போது அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதை பார்த்த மிக்கேலும், நிர்மலாதேவியும் லூர்துமணியை கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு தப்பி சென்று விட்டனராம்.
அக்காள்-தம்பி கைது
இதுகுறித்து லூர்துமணி கொடுத்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிர்மலாதேவி, மிக்கேல் ஆகியோரை கைது செய்தனர்.