சாமியார் உருவபொம்மை எரிப்பு


சாமியார் உருவபொம்மை எரிப்பு
x

பாளையங்கோட்டையில் சாமியார் உருவபொம்மை எரிக்கப்பட்டது.

திருநெல்வேலி

தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து தெரிவித்த கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை சீவி கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு தருவதாக அறிவித்தார்.

இதனை கண்டித்து திராவிட தமிழர் கட்சியின் சார்பில் நேற்று பாளையங்கோட்டை பஸ்நிலையம் அருகே சாமியாரின் உருவ பொம்மையை எரிக்கப் போவதாக தகவல் பரவியது. இதையடுத்து பாளையங்கோட்டை உதவி போலீஸ் கமிஷனர் பிரதீப் மற்றும் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

அப்போது திருவனந்தபுரம் சாலையில் இருந்து பஸ்நிலையம் நோக்கி வந்த திராவிட தமிழர் கட்சியினர் திடீரென சாமியாரின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தினர். அப்போது போலீசார் ஓடி வந்து தடுப்பதற்குள் உருவ பொம்மை முழுவதுமாக எரிந்து விட்டது.

இதையடுத்து திராவிட தமிழர் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கதிரவன், மாவட்ட செயலாளர் திருக்குமரன், மாநில மகளிர் அணி செயலாளர் மீனா மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story