ஆடுகளை ரத்த கழிச்சல் நோய் தாக்கும் அபாயம் ஆராய்ச்சி நிலையம் எச்சரிக்கை


ஆடுகளை ரத்த கழிச்சல் நோய் தாக்கும் அபாயம் ஆராய்ச்சி நிலையம் எச்சரிக்கை
x

ஆடுகளை ரத்த கழிச்சல் நோய் தாக்கும் அபாயம் இருப்பதாக ஆராய்ச்சி நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாமக்கல்

நாமக்கல்:

மழைக்கு வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 4 மி.மீட்டரும், நாளை (வியாழன்) 6 மி.மீட்டரும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 8 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்ப நிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 93.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 69.8 டிகிரியாகவும் இருக்கும்.

காற்று 6 கி.மீ. வேகத்தில் மேற்கு திசையில் இருந்து வீசும். காற்றின் ஈரப்பதம் குறைந்தபட்சமாக 40 சதவீதமாகவும், அதிகபட்சமாக 80 சதவீதமாகவும் இருக்கும்.

ரத்த கழிச்சல் நோய்

ஆடுகளில் ரத்த கழிச்சல் நோய், எய்மீரியா என்கிற செல் ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது. குறிப்பாக சுகாதாரமற்ற சூழலில் சிறிய இடத்தில் அதிக எண்ணிக்கையில் அடைத்து வளர்க்கப்படும் குட்டிகளில் ரத்த கழிச்சல் நோய் அதிகமாக காணப்படும். நோயினால் பாதிக்கப்பட்ட குட்டிகளில் தீவனம் திண்ணாமை, உடல் மெலிவு, ரத்த சோகை போன்ற அறிகுறிகள் தென்படும். பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு சல்பா மற்றும் ஆம்ரோலியம் மருந்துகளை கொடுக்கலாம். குட்டிகளை பெரிய ஆடுகளில் இருந்து பிரித்து வளர்ப்பதன் மூலம் இந்தநோய் வராமல் தடுக்கலாம்.

நாட்டுக்கோழிகளில் புற ஒட்டுண்ணிகளை கட்டுப்படுத்த 10 வசம்பு குச்சிகளை பொடி செய்து, 5 லிட்டர் தண்ணீரில் கலந்து கோழியை கழுத்து வரை நனைத்து எடுக்க வேண்டும். பின்னர் இந்த கலவையை கொட்டகையின் ஓரங்களிலும் தெளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.


Next Story