டிராக்டர்களில் பாதுகாப்பின்றி ஆட்களை ஏற்றி சென்றால் நடவடிக்கை-வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை


டிராக்டர்களில் பாதுகாப்பின்றி ஆட்களை ஏற்றி சென்றால் நடவடிக்கை-வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 1 March 2023 12:15 AM IST (Updated: 1 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் டிராக்டர்கள் மற்றும் டிரெய்லர்கள் ஆகிய வாகனங்களின் உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களுக்கு முறையான சாலை வரி, தகுதி சான்று, வாகன காப்பீடு மற்றும் ஓட்டுனர் உரிமம் ஆகிய அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் மட்டுமே சாலையில் இயக்க வேண்டும். மேலும் டிராக்டருடன் முறையாக பதிவு செய்த டிரெய்லரை மட்டுமே இணைக்க வேண்டும். அவ்வாறு முறையாக பதிவு செய்யப்படாத டிரெய்லரை டிராக்டருடன் இணைத்து சாலையில் இயக்கினாலும், பாதுகாப்பின்றி ஆட்களை ஏற்றி சென்றாலும் மோட்டார் வாகன சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். டிராக்டர் மற்றும் டிரெய்லரை விவசாய பயன்பாட்டிற்கு பயன்படுத்தினால் முறையாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வரி சலுகை மேற்குறிப்பு பெற்று இருக்க வேண்டும். அவ்வாறு வரி சலுகை மேற்குறிப்பு பெற்றுள்ள வாகனங்களை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தினாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story