கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை
பண்ருட்டி அருகே திருமணமான ஓராண்டில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே உள்ள மாளிகம்பட்டு தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்து(வயது 27). தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த குருசாமி மகள் செல்வகுமாரி(21) என்பவரை கடந்த ஓராண்டுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது செல்வகுமாரி 9 மாத கர்ப்பணியாக உள்ளார். அடுத்த வாரம் வளையணி விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்த செல்வகுமாரி தூக்குப்போட்டு கொண்டார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே செல்வகுமாரி பரிதாபமாக இந்தார். செல்வகுமாரியின் தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை? இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் திருமணமாகி ஓராண்டே ஆவதால் செல்குமாரியின் சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து கடலூர் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.