கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை


கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை
x

லாலாபேட்டை அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்

கர்ப்பிணி

கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே உள்ள பழைய ஜெயங்கொண்டம் குடித்தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் ராகவி (வயது 28). இவருக்கும், கருப்பூர் பகுதியை சேர்ந்த நவீன்குமார் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது ராகவி 7 மாதம் கர்ப்பிணியாக இருந்தார்.

இதனால் கடந்த மாதம் பழைய ஜெயங்கொண்டத்தில் உள்ள தனது தாய் வீட்டில் ராகவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. இதனால் ராகவி தனது தாய் வீட்டில் பிரசவத்திற்காக இருந்துள்ளார். மேலும், பிரசவ பயம் அவருக்கு இருந்துள்ளது.

தாய்-சிசு சாவு

இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராகவி மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். இதைக்கண்ட உறவினர்கள் ராகவியை மீட்டு சிகிச்சைக்காக கோவகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு ராகவியை பரிசோதித்த டாக்டர்கள் அவரும், வயிற்றில் உள்ள சிசுவும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

உடல் ஒப்படைப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் அங்கு வந்து ராகவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நேற்று ராகவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த தற்கொலை சம்பவம் குறித்த புகாரின்பேரில், லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story