கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடியில் திருமணமான 6 மாதத்தில் கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் மர்மம் இருப்பதாக அவரது தாயார் போலீசில் புகார் செய்தார்.
தூத்துக்குடியில் திருமணமான 6 மாதத்தில் கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் மர்மம் இருப்பதாக அவரது தாயார் போலீசில் புகார் செய்தார்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
கர்ப்பிணி
தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தை சேர்ந்தவர் ரொமிங்டன். இவரது மனைவி ஜேசு திலகா (வயது 26). இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. ஜேசு திலகா தற்போது 2 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனால் ஜேசு திலகாவின் தாயார் தினமும் மகளை பார்க்க வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் அவர் நேற்று தனது மகளை பார்க்க வந்தபோது ஜேசு திலகா தூக்கில் பிணமாக தொங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தனது மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக தாளமுத்துநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
உதவி கலெக்டர் விசாரணை
அந்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் திருமணமான 6 மாதங்களில் பெண் இறந்து உள்ளதால், இந்த சம்பவம் குறித்து உதவி கலெக்டர் கவுரவ்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.