கிணற்றில் குதித்து கர்ப்பிணி தற்கொலை


கிணற்றில் குதித்து கர்ப்பிணி தற்கொலை
x

புளியங்குடி அருகே கிணற்றில் குதித்து கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

தென்காசி

அச்சன்புதூர்:

புளியங்குடி அருகே கிணற்றில் குதித்து கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

கர்ப்பிணி

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள கரையாளனூர் நடுத்தெருவைச சேர்ந்தவா் முருகன். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (வயது 28). இவர்களுக்கு 2 வயதில் குழந்தை உள்ள நிலையில் ராஜேஸ்வரி தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்ததார்.

கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜேஸ்வரி புளியங்குடி அருகே புன்னையாபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அருகில் உள்ள கிணற்றில் குதித்து ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வாசுதேவநல்லூர் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ராஜேஸ்வரியின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

சொக்கம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உதவி கலெக்டர் விசாரணை

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ராஜேஸ்வரிக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் இந்த சம்பவம் குறித்து தென்காசி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story