மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கர்ப்பிணி சாவு
பிரசவ வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கர்ப்பிணி பரிதாபமாக இறந்தார்.
திருவண்ணாமலை
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் அருகே உள்ள வண்ணாங்குளம் குடிமி குடிசை பகுதியை சேர்ந்தவர் துரைராஜ், ராணுவ வீரர். இவர் காஷ்மீரில் ராணுவ பணியில் உள்ளார்.
இவரது மனைவி ரேகா (வயது 32). இவர்களுக்கு தனஸ்ரீ என்ற மகள் உள்ளார். இவர் தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
9 மாத கர்ப்பிணியான ரேகாவுக்கு இன்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது.
உடனடியாக அவரை காரில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர். அங்கு ரேகாவை பரிசோதனை செய்த டாக்டர், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது சம்பந்தமாக 5 புத்தூரில் வசிக்கும் ரேகாவின் தாய் ஜோதிக்கு தகவல் கிடைத்தது.
அவர் இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தரணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story