ஸ்கேன் எடுக்க மணிக்கணக்கில் காத்திருக்கும் கர்ப்பிணிகள்


ஸ்கேன் எடுக்க மணிக்கணக்கில் காத்திருக்கும் கர்ப்பிணிகள்
x

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுப்பதற்காக கர்ப்பிணிகள் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுப்பதற்காக கர்ப்பிணிகள் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காத்திருக்கும் கர்ப்பிணிகள்

திருப்பத்தூரில் கலெக்டர் அலுவலக பகுதியில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகம் எப்போது பரபரப்பாக காட்சி அளிக்கும். அவ்வாறு சிகிச்சை பெற வருபவர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் கிடையாது. இதனால் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு வருபவர்கள் இன்னல்களுடன் வீடு திரும்பும் நிலை உள்ளது.

இதேபோல் திருப்பத்தூரை சுற்றி 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இப்பகுதி பொதுமக்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியை மட்டுமே நம்பி உள்ளனர். மேலும் திருப்த்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் தினமும் சிகிச்கைக்கு வருகின்றனர். அவர்களுக்கு ஸ்கேன் எடுக்க போதுமான டாக்டர்கள் கிடையாது. 2 டாக்கடர் பணியில் இருக்க வேண்டும். ஆனால் ஒருவர் மட்டுமே பணியில் உள்ளதாகவும், அவரும் புறநோயாளிகள் பிரிவுக்கு சென்று வந்த பிறகுதான் கர்ப்பிணிகளை பெண்களை பார்க்க முடிகிறது.

கூடுதல் டாக்டர்கள்

இதனால் ஸ்கேன் எடுக்க வரும் கர்ப்பிணிகள் காலை 8 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மணிகணக்கில் காத்து இருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஸ்கேன் எடுக்கும் அறை முன்பு ஏராளமான கர்ப்பிணிகள் தினமும் கால் கடுக்க காத்து இருகின்றனர். மேலும் சில நாட்களில் டாக்டர்கள் வருவது கிடையாது. இதனால் ஸ்கேன் எடுக்க வரும் கர்ப்பிணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் அவல நிலையும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதேபோல் புறநோயாளிகள் உட்கார இருக்கை ஏதும் கிடையாது. இதனால் அவர்கள் தரையில் அமரும் அவநிலை உள்ளது. அரசு ஆஸ்பத்திரிக்கு அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதில் ஒருசில மாடிகளை தவிர மற்றவை பயன்படுத்தப்படாமல் உள்ளது. மேலும் ஆஸ்பத்திரியில் குடிப்பதற்கு தண்ணீர் வசதியே கியைடாது.

திருப்பத்தூர் மாவட்டமாக உள்ளது. இதனால் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தி ஆஸ்பத்திரிக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், தேவையான டாக்டர்களையும் உடனே நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story