நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டுமின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முதற்கட்ட பரிசோதனை நாளை மறுநாள் நடக்கிறது
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாளை மறுநாள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முதற்கட்ட பரிசோதனை நடைபெற உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி அருகே தச்சூரில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கட்டுள்ளது.இந்த நிலையில் வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை முதற்கட்டமாக பரிசோதனை செய்து, தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்ப பொறியாளர்கள் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) தச்சூர் சேமிங்கு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை முதற்கட்ட பரிசோதனை பணி மேற்கொள்ள வருகிறார்கள். எனவே நாளை மறுநாள் காலை 9 மணியளவில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான எனது தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை திறக்கப்படவுள்ளது. எனவே அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளும் முதற்கட்ட பரிசோதனையில் கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு மேற்கண்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.