மாணவர்கள் தயாரித்தஉணவுகள் விற்பனை விழா


மாணவர்கள் தயாரித்தஉணவுகள் விற்பனை விழா
x
தினத்தந்தி 30 Jan 2023 12:15 AM IST (Updated: 30 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராஜலெட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் தயாரித்த உணவுகள் விற்பனை விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

தூத்துக்குடி வாகைக்குளத்தில் உள்ள ராஜலெட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களின் தனித்திறன்களை ஊக்குவிக்கும் வண்ணம் விற்பனை விழா நேற்று நடந்தது.

இந்த விழாவிற்கு ராஜலெட்சுமி கல்விக் குழுமங்களின் தாளாளர் ஆறுமுகநயினார் மற்றும் ராஜலெட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினர். ராஜலெட்சுமி கல்விக் குழுமங்களின் செயலாளர் ஆறுமுகம் கிருஷ்ணகுமார் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

விழாவில் கல்லூரி மாணவ-மாணவிகள் 30 விற்பனையகங்களை அமைத்திருந்தனர். இதில் பாரம்பரிய உணவுப் பொருட்களை மாணவ-மாணவிகள் தாமாகவே தயார் செய்து விற்பனை செய்தனர். மேலும் மாணவர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வண்ணம் பல்வகை விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடந்தது.

விழாவில் ராஜலெட்சுமி கல்விக்குழுமத்தின் கீழ் இயங்கும் ராஜலெட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ராஜலெட்சுமி கல்வியியல் கல்லூரி, அறிஞர் அண்ணா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு உணவுப் பொருட்களை வாங்கினர்.

விழா ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ராஜதுரை மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்


Next Story