உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் வழங்கும் நிகழ்ச்சி
செய்யாறு வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
செய்யாறு
செய்யாறு தாலுகா புளியரம்பாக்கம் கிராமத்தில் செய்யாறு வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன் தலைமை தாங்கினார்.
இதில் முன்னாள் அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களை வழங்கினர்.
அதனைத்தொடர்ந்து தூசி கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் மற்றும் அ.ம.மு.க.வினர் ஒன்றிய குழு உறுப்பினர் கவுசல்யா உள்ளிட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
அவர்களுக்கு முன்னாள் அமைச்சர்கள் சால்வை அணிவித்து கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் செய்யாறு வடக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன், கலசபாக்கம் முன்னாள் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், மாவட்ட இணை செயலாளர் விமலா மகேந்திரன், மாவட்ட துணை செயலாளர் சுபாஷினி, முன்னாள் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், நகர செயலாளர் வெங்கடேசன், நகர அவைத்தலைவர் ஜனார்த்தனன், ஆவின் தலைவர் பாரிபாபு உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.