ஜனாதிபதி திரவுபதி முர்மு தமிழகம் வருகிறார்
ஜனாதிபதி திரவுபதி முர்மு தமிழகம் வருகிறார் கடல்சார் பல்கலைக்கழக விழாவில் கலந்து கொள்கிறார்.
சென்னை,
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா, வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவிக்க உள்ளார்.
மேலும், இந்த விழாவில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய மந்திரி சர்பானந்தா சோனோவால், இணை மந்திரிகள் ஸ்ரீபாத் நாயக், சாந்தனு தாக்கூர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
இதையொட்டி, ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 26-ந் தேதி தமிழகம் வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story