சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்


சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்
x

பேட்டையில் சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

திருநெல்வேலி

:பேட்டை

முக்கூடல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த வாலிபருக்கும், பேட்டை பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நாளை திருமணம் நடக்க இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அந்த சிறுமிக்கு 16 வயது பூர்த்தியாகி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சிறுமியின் பெற்றோருக்கு போலீசார் அறிவுரை கூறி, எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கினார்கள். இதனால் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது.


Next Story