65 இடங்களில் காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம்


65 இடங்களில் காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம்
x

மயிலாடுதுறை மாவட்டத்தில் 65 இடங்களில் காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது என கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை


மயிலாடுதுறை மாவட்டத்தில் 65 இடங்களில் காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது என கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

காய்ச்சல் தடுப்பு முகாம்

மயிலாடுதுறை அருகே செருதியூர் கிராமத்தில் சுகாதார துறையின் சார்பில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்து, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் மாவட்ட கலெக்டர் கூறியதாவது:-

மருத்துவக்குழு

மாவட்டத்திலுள்ள 5 வட்டாரங்களில் மருத்துவ அலுவலர் தலைமையில் மருத்துவ குழுக்கள் 50 பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.

5 வட்டாரங்களில் ஒரு நடமாடும் மருத்துவகுழு மருத்துவ அலுவலர் தலைமையில் ஒவ்வொரு வட்டாரத்திலும் தினமும் 15 இடங்களிலும் மாவட்டத்தில் மொத்தம் 65 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்

மேலும் மாவட்டத்தில் உள்ள 31 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தினமும் காய்ச்சல் சிகிச்சை முகாம் நடைபெறும். காய்ச்சல் பாதிப்புள்ளவர்கள் மேற்கண்ட முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்றார்.

இந்த முகாமில் சுகாதாரத் துறை துணை இயக்குனர் மருத்துவர் குமரகுருபரன் மற்றும் மருத்துவர்கள். செவிலியர்கள் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story