வரத்து அதிகரிப்பால் கொத்தமல்லி விலை வீழ்ச்சி


வரத்து அதிகரிப்பால் கொத்தமல்லி விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 10 Oct 2022 12:15 AM IST (Updated: 10 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரி பகுதியில் வரத்து அதிகரிப்பால் கொத்தமல்லி விலை கடும் வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

கிருஷ்ணகிரி

சூளகிரி:

சூளகிரி பகுதியில் வரத்து அதிகரிப்பால் கொத்தமல்லி விலை கடும் வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

கொத்தமல்லி சாகுபடி

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, புலியரசி, மாரண்டபள்ளி, செம்பரசனபள்ளி, அத்திமுகம், உத்தனபள்ளி மற்றும் சுற்று வட்டாரத்தில் பல ஏக்கரில் விவசாயிகள் கொத்தமல்லி சாகுபடி செய்து வருகிறார்கள். இவற்றை விவசாயிகள் அறுவடை செய்து சூளகிரியில் உள்ள மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

அவற்றை வியாபாரிகள் வாங்கி சேலம், கோவை, திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கும், கேரளா, கர்நாடக பகுதிகளுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வருகின்றனர். இதனிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு கட்டு கொத்தமல்லி ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. கொத்தமல்லி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

விலை வீழ்ச்சி

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சூளகிரி மார்க்கெட்டுக்கு கொத்தமல்லி வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கொத்தமல்லி விலை வீழ்ச்சி அடைந்தது. நேற்று ஒரு கட்டு கொத்தமல்லி ரூ.5-க்கு விற்பனை செய்யப்பட்டது. கொத்தமல்லி விலை வீழ்ச்சியால் வாங்குவதற்கு வியாபாரிகள் முன் வராததால் விவசாயிகள் கவலை அடைந்தனர். அதேநேரத்தில் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story