வெல்லம் வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி


வெல்லம் வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 4 July 2022 12:30 AM IST (Updated: 4 July 2022 12:33 PM IST)
t-max-icont-min-icon

பிலிக்கல்பாளையம் சந்தையில் வரத்து அதிகரிப்பால் வெல்லம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

நாமக்கல்

பரமத்திவேலூர்,

பிலிக்கல்பாளையம் சந்தையில் வரத்து அதிகரிப்பால் வெல்லம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

கரும்பு பயிர்

பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளான ஜேடர்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, பாண்டமங்கலம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் விளையும் கரும்புகளை கரும்பு ஆலை உரிமையாளர்கள் வாங்கி சென்று உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை தயார் செய்கின்றனர்.

பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக (மூட்டைகளாக) கட்டி பிலக்கல்பாளையத்தில் உள்ள வெள்ள ஏல சந்தைக்கு கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வெல்ல ஏலச்சந்தையில் ஏலம் நடைபெறுகிறது.

விலை வீழ்ச்சி

வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து செல்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,160 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,180 வரையிலும் ஏலம் போனது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,120 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,120 வரையிலும் ஏலம் போனது. வெல்லம் வரத்து அதிகரித்துள்ளதால் வெல்லம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்


Next Story