விலை சற்று கூடியது: மதுரை மல்லிகை கிலோ ரூ.600-க்கு விற்பனை


விலை சற்று கூடியது: மதுரை மல்லிகை கிலோ ரூ.600-க்கு விற்பனை
x

மதுரை மல்லிகை கிலோ ரூ.600-க்கு விற்பனை சற்று கூடியது

மதுரை


மதுரை மட்டுமின்றி அக்கம் பக்கத்தில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டுக்கு மல்லிகைப்பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

மதுரை மல்லிகைப்பூக்களுக்கு தனி மவுசு என்பதால் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. விழா மற்றும் சுபமுகூர்த்த தினங்களில் மல்லிகைப்பூ விலை உச்சத்தை தொடும்.

ஆனால், கடந்த வாரங்களில் அதிக வரத்து காரணமாக மல்லிகை விலை கிலோ ரூ.300-க்கும் குறைவாக இருந்தது. இதுபோல் மற்ற பூக்களின் விலையும் குறைவாகவே இருந்தது. இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) பக்ரீத் பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த தினம் என்பதால், மல்லிகை பூக்கள் விலை நேற்று சற்று உயர்ந்தது. அதன்படி நேற்று மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் கிலோ மல்லிகை ரூ.600-க்கு விற்பனையானது.

மற்ற பூக்களான முல்லை ஒரு கிலோ 400 ரூபாய்க்கும், பிச்சி 500 ரூபாய்க்கும், சம்பங்கி 120 ரூபாய்க்கும், செண்டுமல்லி 100 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் 200 ரூபாய்க்கும், மரிக்கொழுந்து 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன. மக்கள் அதிக அளவில் மார்க்கெட்டுகளில் திரண்டதால் விற்பனை களைகட்டியது.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், மல்லிகை பூக்கள் மகசூல் அதிகரித்திருப்பதால் பூக்களின் வரத்து அதிகமாக உள்ளது. கடந்த வாரத்தில் பூக்கள் விலை மிகக் குறைவாக இருந்த காரணத்தால் அதிக அளவில் சென்ட் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பக்ரீத் பண்டிகை மற்றும் முகூர்த்த தினத்தையொட்டி மீண்டும் வியாபாரம் சூடுபிடிக்க ெதாடங்கி இருக்கிறது. வரும் நாட்களில் இந்த நிலை நீடிக்கும் என நம்புகிேறாம், என்றனர்.


Related Tags :
Next Story