வரத்து அதிகரிப்பால் பூக்களின் விலை வீழ்ச்சி

வரத்து அதிகரிப்பால் பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
கரூர்
நொய்யல், கவுண்டன் புதூர், ஓலப்பாளையம், நல்லிக்கோவில், நடையனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் குண்டு மல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்குவிளையும் பூக்களை விவசாயிகள் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.350-க்கும், சம்பங்கி ரூ.80-க்கும், அரளி ரூ.80-க்கும், ரோஜா ரூ.140- முல்லைப் பூ ரூ.300-க்கும், செவ்வந்திப்பூ ரூ.150-க்கும், கனகாம்பரம் ரூ.350-க்கும் விற்பனையானது. வரத்து அதிகரித்துள்ளதாலும், திருமணம் மற்றும் கோவில் விசேஷங்கள் இல்லாததாலும் பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
Related Tags :
Next Story