கோவிலில் மின்சாரம் பாய்ந்து பூசாரி பலி


கோவிலில் மின்சாரம் பாய்ந்து பூசாரி பலி
x

கோவிலில் மின்சாரம் பாய்ந்து பூசாரி இறந்தார்.

திருச்சி

சமயபுரம்:

கோவில் பூசாரி

மண்ணச்சநல்லூைர அடுத்த திருப்பைஞ்சீலி அருகே உள்ள ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் அங்கமுத்து. இவர் கோவத்தகுடியில் புதிதாக கட்டியுள்ள சித்தர் கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர் இறந்துவிட்டார்.

இதைத்தொடர்ந்து அங்கமுத்துவின் மகன் நந்தகுமார் (வயது 24), அந்த கோவிலின் பூசாரியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை கோவிலுக்கு சென்ற அவர் மூலஸ்தானத்தை சுத்தம் செய்துவிட்டு, அங்குள்ள மின் மோட்டாரை இயக்கினார்.

சாவு

அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில், சம்பவ இடத்திலேயே நந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து நந்தகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவிலில் மின்சாரம் பாய்ந்து பூசாரி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story