48 கிலோ எடை கொண்ட கரகத்தை சுமந்து வந்த பூசாரி


48 கிலோ எடை கொண்ட கரகத்தை சுமந்து வந்த பூசாரி
x

பாகலூரில் கோட்டை மாரியம்மன் கோவில் விழாவில் 48 கிலோ எடை கொண்ட கரகத்தை சுமந்தபடி பூசாரி வந்தார்.

கிருஷ்ணகிரி

ஓசூர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூரில் பழமை வாய்ந்த கிராம தேவதை கோட்டை மாரியம்மன் கோவில் தேரோட்ட விழா நடைபெற்றது. தொடர்ந்து பல்லக்கு உற்சவம் நடைபெற்றது. விழாவின முக்கிய நிகழ்ச்சியாக திரவுபதி கரக உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, அன்று நள்ளிரவு 1 மணிக்கு மேல் 48 கிலோ எடை கொண்ட திரவுபதி அம்மன் பூங்கரகத்தை பூசாரி சுமந்து நடனம் ஆடி வந்தார். தொடர்ந்து இடைவிடாது, நேற்று காலை 10 மணி வரை பாகலூரின் முக்கிய வீதிகளிலும், சூடாபுரம் உள்ளிட்ட இடங்களிலும் மற்றும் வீடுகள் முன்பும் வலம் வந்து கரகம் ஆடியவாறு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியை, பாகலூர், பேரிகை, ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கண்டு களித்து மெய் சிலிர்த்தனர்.


Next Story