பூசாரிகள் பேரமைப்பு கூட்டம்
பூசாரிகள் பேரமைப்பு கூட்டம்
நாகப்பட்டினம்
வாய்மேடு மேற்குப்பின்னையடி மாரியம்மன் கோவிலில் வேதாரண்யம் ஒன்றிய பூசாரிகள் பேரமைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் பழனிவேல், ஒன்றிய துணைத்தலைவர் சிங்காரவேல், ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுரவ தலைவர் ஜோதிநாதன் வரவேற்றார். கூட்டத்தில், பூரண மதுவிலக்கை தமிழ்நாட்டில் கொண்டுவர வேண்டும். வீடுகளுக்கு இலவசம் மின்சாரம் வழங்குவது போல் கோவில்களுக்கும் இலவசம் மின்சாரம் வழங்க வேண்டும். 60 வயது முடிந்த பூசாரிகள் அனைவருக்கும் மாத ஓய்வூதியம் ரூ.5000 வழங்க வேண்டும். கோ தானமாக வரும் பசுக்களை பூசாரிகளுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிைறவேற்றப்பட்டன. முடிவில் தலைஞாயிறு ஒன்றிய தலைவர் கந்தசாமி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story