பூசாரிகளுக்கு நலவாரியம் மூலம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்


பூசாரிகளுக்கு நலவாரியம் மூலம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்
x

பூசாரிகளுக்கு நலவாரியம் மூலம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்

நாகப்பட்டினம்

60 வயதுக்கு மேல் உள்ள பூசாரிகளுக்கு நலவாரியம் மூலம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

நாகையில் அனைத்து கோவில் பூசாரிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் நலவாரிய சங்க மாநில செயற்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் கவுரவ தலைவர் தண்டபாணி தேசிகர் பண்டாரசுவாமிகள் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ஆனந்தராஜ், செயலாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தை நாகை மாவட்டத்தலைவர் ராமமூர்த்திசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் மாநில துணைத்தலைவர் தங்கசாமி, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சங்கரநாராயணன், ராமச்சந்திரன், சேகர், மாநில பொருளாளர் புருஷோத்தமன் ஆகியோர் பேசினர். தொடர்ந்து சிவசேனா மாநில அமைப்பாளர் தங்க.முத்துகிருஷ்ணன் பேசினார்.

இலவச மின்சாரம்

கூட்டத்தில், பட்டா இல்லாத கோவில்களுக்கு வரைமுறைப்படுத்தி அரசு பட்டா வழங்க வேண்டும். அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மூலமாக அந்த மாவட்டத்தில் இருக்கும் கோவில்களுக்கு தீபம் எண்ணை வழங்க வேண்டும். வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது போல் கோவில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். கோதானமாக வரும் பசுக்களை பூசாரிகளுக்கு வழங்க வேண்டும். 60 வயதுக்கு மேல் உள்ள பூசாரிகளுக்கு நலவாரியம் மூலம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

ஓய்வூதியம் பெறும் பூசாரி மறைவுக்கு பிறகு மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். பூஜை செய்யும் பூசாரிகளுக்கு மாதம் சம்பளம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில கவுரவத்தலைவர் வரதராஜன், பொருளாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட அமைப்பாளர் தங்கமுருகன் நன்றி கூறினார்.


Next Story