தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர்கள் ஆய்வு கூட்டம்


தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர்கள் ஆய்வு கூட்டம்
x

நாகையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர்கள் ஆய்வு கூட்டம் நடந்தது.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர்களுக்கு குறுவை சாகுபடி கடன் வழங்குவது, ஆதரவற்ற விதவைகளுக்கு கடன் வழங்குவது, மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்குவது மற்றும் மத்திய காலக் கடன்கள் வழங்குவது குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மண்டல இணைப் பதிவாளர் அருள் அரசு தலைமை தாங்கினார். இதில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் இணைப்பதிவாளர் பெரியசாமி, வருவாய் முதன்மை அலுவலர் ஜெகத்ரட்சகன், கூட்டுறவு சங்கங்களின் பணியாளர் அலுவலர் துணைப் பதிவாளர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story