தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள் கூட்டம்


தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள் கூட்டம்
x

பேராவூரணியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள் கூட்டம் நடந்தது.

தஞ்சாவூர்

பேராவூரணி;

பேராவூரணியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்களின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. தஞ்சை மாவட்ட செயலாளரும், டெல்டா மண்டல பொறுப்பாளருமான மாதவன் வரவேற்று பேசினார். மாநில பொதுச் செயலாளர் திருநாவு.குமரேசன் பேசினார். கூட்டத்தில் தொடக்க கூட்டுறவு சங்கங்களில், பல்நோக்கு சேவை திட்டத்தை வலுக்கட்டாயமாக செயல்படுத்தி நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். தேவை உள்ள சங்கங்களில் மட்டும் இதை செயல்படுத்த வேண்டும். நகர கடன் கூட்டுறவு கடன் சங்கங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணியாளர்களின் ஊதிய உயர்வு குறித்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். பணியாளர்களின் ஊதிய உயர்வு குறித்த கமிட்டி அறிக்கையை உடனே வெளியிட வேண்டும். அரசின் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் சங்கங்களுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையை வட்டியுடன் விடுவிக்க வேண்டும். எவ்வித பாகுபாடின்றி அனைத்து சங்க பணியாளர்களுக்கும் போனஸ் மற்றும் பண்டிகை முன்பணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முடிவில் மாவட்டத் தலைவர் திலகவதி நன்றி கூறினார்.



Next Story