ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணிநேரமும் செயல்படுமா?


ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணிநேரமும் செயல்படுமா?
x

சீர்காழி அருகே வள்ளுவக்குடியில் ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணிநேரமும் செயல்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

மயிலாடுதுறை

சீர்காழி;

சீர்காழி அருகே வள்ளுவக்குடியில் ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணிநேரமும் செயல்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

ஆரம்ப சுகாதார நிலையம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வள்ளுவக்குடி கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் வள்ளுவக்குடி, அகனி, கொண்டல், தென்னங்குடி, ஏனாகுடி, நிம்மேலி, மருதங்குடி, ஆலஞ்சேரி, கொட்டாயமேடு, அத்தியூர், அகரஎலத்தூர், தேனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தினமும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

24 மணி நேரமும் செயல்படுமா?

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிக்கடி டாக்டர்கள் இல்லாததால் இந்த பகுதியில் உள்ள நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சீர்காழி அல்லது வைத்தீஸ்வரன் கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை இருந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் 24 மணிநேரமும் டாக்டர்கள் மற்றும் கூடுதல் பணியாளர்களை கொண்டு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story