சுகாதாரம் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையம்


சுகாதாரம் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையம்
x
தினத்தந்தி 29 May 2023 1:30 AM IST (Updated: 29 May 2023 1:31 AM IST)
t-max-icont-min-icon

சேரம்பாடியில் சேறும், சகதியுமான ஆரம்ப துணை சுகாதார நிலையம் முன்பு கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் வலியுறுத்தி உள்ளனர்.

நீலகிரி

பந்தலூர்

சேரம்பாடியில் சேறும், சகதியுமான ஆரம்ப துணை சுகாதார நிலையம் முன்பு கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் வலியுறுத்தி உள்ளனர்.

சுகாதார நிலையம்

பந்தலூர் அருகே சேரம்பாடியில் சேரங்கோடு ஊராட்சி அலுவலகம் அருகே ஆரம்ப துணை சுகாதார நிலையம் உள்ளது. இங்கு சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த கர்ப்பிணிகள் மருத்துவ பரிசோதனை, தடுப்பூசி செலுத்த வந்து செல்கின்றனர்.

அங்கு சாலை சீரமைப்பு பணியின் போது, ஆரம்ப துணை சுகாதார நிலையம் தாழ்வான இடமாக மாறியது. இதனால் அதன் முன்புள்ள கழிவுநீர் கால்வாயில் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. அவ்வப்போது பெய்யும் மழை காரணமாக, கழிவுநீருடன் தண்ணீரும் தேங்குகிறது. இதன் காரணமாக அங்கு துர்நாற்றம் வீசுகிறது. துணை சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகள் மூக்கை பொத்தியபடி சென்று வருகின்றனர்.

சரிசெய்ய வேண்டும்

மேலும் அங்கு குட்டை போல் தேங்கி கிடப்பதால், நோயாளிகள், கர்ப்பிணிகள், நர்சுகள், பணியாளர்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். கழிவுநீரை கடந்து செல்வதற்காக கற்கள் போடப்பட்டு உள்ளது. சில நேரங்களில் நோயாளிகள் தவறி கீழே விழுந்து காயமடைகின்றனர். கழிவுநீர் கால்வாயின் மேல்மூடி திறந்து கிடப்பதால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு தொல்லை அதிகரித்து உள்ளது.

தற்போது சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் துணை சுகாதார நிலையத்திற்கு நோயை குணமாக்க வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நோயாளிகள் கூறும்போது, சேரம்பாடியில் உள்ள அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்திற்கு வரும் கர்ப்பிணிகள், நோயாளிகள் அங்கு தேங்கி நிற்கும் கழிவுநீரை கடக்கும் போது, சேற்றில் வழுக்கி கீழே விழும் அபாயம் உள்ளது. இதனால் அதன் அருகே சீரமைக்கப்பட்ட சாலையை தாழ்வாக அமைக்க வேண்டும். அதன் முன்பு கழிவுநீர், தண்ணீர் தேங்காமல் இருக்க கழிவுநீர் கால்வாயை உயர்த்தி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story