முதல்போக நெல் நடவு பணி
தேனி மாவட்டத்தில், கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் முல்லைப்பெரியாறு அணையின் பாசனத்தின் மூலம் நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
தேனி மாவட்டத்தில், கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் முல்லைப்பெரியாறு அணையின் பாசனத்தின் மூலம் நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், நெல் 2 போகமாக விளைகிறது. அதன்படி, கம்பம் பள்ளத்தாக்கின் கடைமடை பகுதிகளாக கூழையனூர், வீரபாண்டி, உப்புக்கோட்டை, பழனிசெட்டிபட்டி, சடையால்பட்டி, போடேந்திரபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பாசன நிலங்கள் உள்ளன.
தற்போது தென்மேற்கு பருவமழையையொட்டி தேனி மாவட்டத்தில் எல்லையிலும், கேரள மாநிலத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து சீராக உள்ளது. இதையடுத்து கம்பம் பள்ளத்தாக்கின் கடைமடை பகுதிகளில் முதல் போக நெல் நடவுப்பணி தற்போது தொடங்கியுள்ளது. விவசாயிகள் தங்களது நிலங்களில் உழவு செய்து, ஆர்வத்துடன் நெல் நடவு பணியை செய்து வருகின்றனர்.