தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆலோசனை கூட்டம்


தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 17 March 2023 12:15 AM IST (Updated: 17 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆலோசனை கூட்டம்

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சின்னசேலம் வட்டார நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சின்னசேலத்தில் நடைபெற்றது. இதற்கு வட்டார தலைவர் சி.சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நா.சீனிவாசன் முன்னிலை வகித்தார். செயலாளர் தமிழரசன் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை, திருநாவலூர் வட்டார செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், ஊக்க ஊதிய உயர்வை வழங்க கோரி நாளை(சனிக்கிழமை) கள்ளக்குறிச்சியில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் திரளாக கலந்து கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடா்ந்து சின்னசேலம் வட்டார புதிய தலைவராக தலைமை ஆசிரியர் சீனிவாசன், செயலாளராக தமிழரசன், பொருளாளராக ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story