தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம்
சாத்தான்குளத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி
தட்டார்மடம்:
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சாத்தான்குளம் வட்டார செயற்குழு கூட்டம் நடைபெற்றது. சாத்தான்குளத்தில் நடந்த கூட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவர் தங்கராஜன் தலைமை தாங்கினார். வட்டார செயலர் அருள்ராஜ வரவேற்றார். கூட்டத்தில் மார்ச் 10-ந்ேததி வட்டார தணிக்கை செய்து வட்டார தேர்தலை நடத்துவது, சாத்தான்குளம் ஒன்றியத்தில் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஜனவரி மாத சம்பளத்தை உடனடியாக வழங்க அதிகாரிகளை கேட்டுக் கொல்வது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கூட்டணி நிர்வாகிகள் செல்வக்குமார், எபனேசர், ஜெகதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வட்டார பொருளாளர் அந்தோணி யூஜின் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story