ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
தென்காசியில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு மற்றும் முடக்கப்பட்டுள்ள உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகளை அரசு அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாரிமுத்து வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் துரைசிங், மாநில செயற்குழு உறுப்பினர்கள் நாகராஜ், லட்சுமி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட துணைத் தலைவர்கள் ராஜன் ஜான், செல்வராஜ், ஜாகிரா, கல்வி மாவட்ட செயலாளர்கள் சிவக்குமார், ராஜ்குமார் உட்பட பலர் பேசினார்கள். முடிவில் மாவட்ட பொருளாளர் மணிமேகலை நன்றி கூறினார்.