தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்


தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்
x

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்

திருவாரூர்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நீடாமங்கலம் வட்டார கிளையின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. வட்டாரத்தலைவர் கவுசல்யா தலைமை தாங்கினார். மாநில துணைச்செயலாளர் ஜூலியஸ் முன்னிலை வகித்தார்.

வட்டாரச்செயலாளர் தமிழரசன் பேசினார். கூட்டத்தில், மாநில செயற்குழு கூட்ட தீர்மானங்கள் படி 2009-க்கு பின் பணியேற்ற இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்து சமவேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும். உயர் கல்வி பயின்ற ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை(செவ்வாய்க்கிழமை) அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம், வருகிற மார்ச் 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை கருப்பு பட்டை அணிந்து பணிக்கு செல்லும் போராட்டம், 18-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப்போராட்டம், ஏப்ரல் 8-ந்தேதி மாநில தலைநகரில் உண்ணாவிரதப்போராட்டம், மே 2-ந்தேதி மாநில தலைநகரில் மறியல் போராட்டம் நடத்துவது. பங்கேற்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை நடைமுறைபடுத்த வலியுறுத்தி குஜராத்தில் நடக்க இருக்கும் அகில இந்திய ஆசிரியர் கூட்டணி மாநாட்டில் நீடாமங்கலம் வட்டாரக்கிளையில் இருந்து 10 பேர் பங்கேற்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக வட்டார பொருளாளர் கண்ணன் வரவேற்றார். முடிவில் வட்டார துணைச்செயலாளர் சோழன் நன்றி கூறினார்


Next Story