தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்


தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்
x

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நெல்லை மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். பாளையங்கோட்டை நகர நிர்வாகி இனிகோ முன்னிலை வகித்தார். வள்ளியூர் வட்டார தலைவர் துரை வரவேற்றார். கூட்டத்தில் மாநில அமைப்பின் அறிவிப்பின்படி வருகிற 20-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் வட்டார நிர்வாகிகள் ராதாபுரம் அருள் தாசன், சகாய தாஸ், செல்வின், நம்பிதுரை, முத்துகிருஷ்ணன், முத்துராஜ், கோவிந்தசாமி, சுரேஷ் முத்துகுமார், பரமேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story