ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்
தென்காசியில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம் நடந்தது.
தென்காசி
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தென்காசி வட்டார செயற்குழு கூட்டம் தென்காசியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சரவணன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் ஷேக் முகமது ரபிக் முன்னிலை வகித்தார். வட்டார செயலாளர் ரவி வரவேற்றார். தென்காசி கல்வி மாவட்ட செயலாளர் ராஜ்குமார் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் வருகிற 3-ந் தேதி நடைபெற உள்ள மாநிலம் தழுவிய மாவட்ட அளவிலான தர்ணா போராட்டத்திற்கு பெருந்திரளான ஆசிரியர்களை திரட்டுவது, வட்டார அளவிலான ஆசிரியர் பிரச்சினைகளை உடனடியாக தீர்வு காண்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சங்கர குமாரசாமி நன்றி கூறினார். கூட்டத்தில் வட்டார துணை தலைவர் ஆரோக்கியசாமி, குத்தாலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story