ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கம்பம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கம்பம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டார தலைவர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் ரமேஷ், நகர அமைப்பாளர் ஜீவா, பொருளாளர் மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், தொடக்கக் கல்வி மாணவர்களின் கல்வித்தரத்தை பாதிக்கும் எண்ணும், எழுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும், காலை உணவு திட்டத்தை 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுப்படுத்த வேண்டும் என்பன உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story