பிரதமர் மோடி பிறந்தநாள் கொண்டாட்டம்


பிரதமர் மோடி பிறந்தநாள் கொண்டாட்டம்
x

திண்டுக்கல், வடமதுரையில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

திண்டுக்கல்

பிறந்தநாள் விழா

பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்தநாள் விழா, நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. அதன்படி, திண்டுக்கல்லில் கிழக்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் அவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் இனிப்பு வழங்கினார். மேலும் ஒய்.எம்.ஆர்.பட்டியில் உள்ள தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு புத்தகப்பை, எழுது பொருட்களை வழங்கினார். மேலும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உள் நோயாளிகளுக்கு சிறுபான்மை அணி நகர தலைவர் ரூபன் தலைமையில் உணவு வழங்கப்பட்டது.

திண்டுக்கல்-நத்தம் சாலையில் உள்ள பொன்னகரம் பகுதியில் பிரதமரின் பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பா.ஜ.க. மாவட்ட செயலாளர் சபாபதி, ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதேபோல் பா.ஜனதா இளைஞர் அணி சார்பில் தாடிக்கொம்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் அன்புஹரிகரன் தலைமை தாங்கினார். இதில் இளைஞர் அணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.

ரத்ததான முகாம்

மேலும் வேடப்பட்டி பகுதியில் பா.ஜனதா கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதேபோல் பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மாவட்ட துணை தலைவர் மல்லிகா, பொருளாளர் மணிகண்டன், மாநில வர்த்தகப்பிரிவு செயலாளர் நாராயணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி மன்றத்தின் பொறுப்பாளர் சரவணன் தலைமையில் தெற்குரதவீதியில் நடந்த நிகழ்ச்சியில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் பொதுச்செயலாளர் காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி வடமதுரை மேற்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் வடமதுரையில் கட்சி கொடி ஏற்றி வைக்கப்பட்டது. அதையடுத்து வடமதுரை தனியார் மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடந்தது. இதில் பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர். அதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பா.ஜ.க மாவட்ட துணை தலைவர் ரமா தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கலை மற்றும் கலாச்சார பிரிவு மாவட்ட தலைவர் சண்முகம், பட்டியல் அணி மாவட்ட தலைவர் ஜெகநாதன், மேற்கு மண்டல் தலைவர் சுதாகர், மண்டல் துணை தலைவர் மாரியப்பன், ஒன்றிய பொதுச்செயலாளர் முனியாண்டி, டாக்டர் சசிகுமார், ஒன்றிய ராணுவ பிரிவு கோபால், ஊடக பிரிவு செந்தில்குமார், பிரசார பிரிவு தலைவர் மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமார், மகளிரணி தலைவி காளீஸ்வரி, இளைஞரணி தலைவர் கமல்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story