தலைமையாசிரியர் எஸ்.கண்ணன் உருவப்படம் திறப்பு


தலைமையாசிரியர் எஸ்.கண்ணன் உருவப்படம் திறப்பு
x

கீரனூர் கே.கே.அன்புச்செல்வன், கே.கே.முருகு பாண்டியன் தந்தை தலைமையாசிரியர் எஸ்.கண்ணன் உருவப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் அண்ணன் சத்திய நாராயணராவ் திறந்து வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

புதுக்கோட்டை

கண்ணன் உருவப்படம் திறப்பு

புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் வேளாண் விற்பனை குழு தலைவரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலரும், முன்னாள் தி.மு.க. ஒன்றிய செயலாளருமான கே.கே. அன்புச்செல்வன் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட அமைப்பாளர் கே.கே. முருகு பாண்டியன் ஆகியோரது தந்தை ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் எஸ்.கண்ணன் கடந்த 13-ந் தேதி அன்று மரணமடைந்தார். இதையடுத்து அவரது உருவப்படம் திறப்பு விழா நேற்று முன்தினம் கீரனூர் பஸ் நிலையம் அருகே உள்ள கள்ளர்தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. விழாவில் மறைந்த கண்ணன் உருவப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் அண்ணன் ஆர்.சத்திய நாராயணராவ் திறந்து வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அஞ்சலி செலுத்தினர்

இதில் கர்நாடக மாநில ரஜினி ரசிகர் மன்ற மாநில செயலாளர் சந்திரகாந்த், முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான டாக்டர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை எம்.எல்.ஏ. டாக்டர் முத்துராஜா மற்றும் அனைத்து மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற செயலாளர்கள் சோலிங்கர் ரவி, சிவகங்கை ராமேஸ்வரன், கல்லல் ரவி, விழுப்புரம் எத்திராஜ், ஊட்டி குமார், நாகப்பட்டினம் ராஜேஸ்வரன், திருவாரூர் தாயுமானவன், புதுக்கோட்டை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள், மகளிர் அணி, இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் அனைத்து கட்சியின் நிர்வாகிகள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், குடும்ப நண்பர்கள் திரளாக கலந்து கொண்டு மறைந்த கண்ணன் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


Next Story