பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அச்சு வெல்லம் ஏலம்
பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அச்சு வெல்லம் ஏலம்
தமிழகத்திேலயே முதன்முறையாக பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அச்ச வெல்லம் ஏலம் நடந்தது. இந்த ஏலத்தை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் முதன்முறையாக அச்சுவெல்லம் ஏலம்
தமிழகத்திலேயே முதன்முறையாக பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அச்சு வெல்லம் ஏலம் நேற்று நடந்தது. இந்த ஏலத்தை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
இதில் வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் வித்யா, தஞ்சாவூர் விற்பனைக்குழு செயலாளர் சுரேஷ் பாபு, ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர்கள் தாட்சாயினி, முருகானந்தம், பிரசார கண்காணிப்பாளர் சித்தார்த்தன், பாபநாசம் உழவர் சந்தை வேளாண்மை உதவி அலுவலர் பாலமுருகன், கும்பகோணம் வேளாண்மை அலுவலர் தாரா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அதிகபட்சமாக ஒரு சிப்பம் ரூ.1200-க்கு ஏலம்
நேற்று நடந்த ஏலத்தில் பாபநாசம், அய்யம்பேட்டை, இலுப்பக்கோரை, கணபதியக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 21 விவசாயிகள், 2130 கிலோ வெல்லத்தை கொண்டு வந்தனர். இதில் 10 வியாபாரிகள் கலந்து கொண்டனர். 30 கிலோ கொண்ட ஒரு சிப்பத்திற்கு அதிகபட்சமாக ரூ.1200-ம், குறைந்த பட்சமாக ரூ.950-ம், சராசரியாக ரூ.1100 என விலை ஏலம் தொகையாக கேட்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஏலத்திற்கான தொகை வழங்கப்பட்டது.