பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கைதி தப்பி ஓட்டம்
பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கைதி தப்பி ஓடினார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பரமக்குடி,
பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கைதி தப்பி ஓடினார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கைதி தப்பி ஓட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா நயினார்கோவில் ஒன்றியம் பாண்டியர் கிராமத்தை சேர்ந்த அங்குசாமி மகன் அஜித்குமார் (வயது 24). இவர் கடந்த 5-ந் தேதி நயினார்கோவில் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கொலை முயற்சி வழக்கு ஒன்றில் சிறு காயங்களுடன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரை போலீசாரும் பாதுகாப்பு பணியில் இருந்து கண்காணித்து வந்தனர். ஆனால் அவர் போலீசாருக்கு தெரியாமல் நேற்று முன்தினம் இரவு பரமக்குடி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டார். போலீசார் எங்கு தேடியும் அவரை பிடிக்க முடியவில்லை.
கண்காணிப்பு கேமரா ஆய்வு
பரமக்குடி அரசு மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் ஆய்வு நடத்தினர். தப்பியோடிய அவரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் பரமக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.